கோத்தகிரி அண்ணாநகர், அம்பேத்கர் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோத்தகிரி அருகே உள்ள அண்ணாநகர் மற்றும் அம்பேத்கார் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள அண்ணாநகர் மற்றும் அம்பேத்கார் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீணாகும் குடிநீர்
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டட்டி அம்பேத்கார் நகர் மற்றும் அண்ணா நகர் கிராமங்களில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வந்ததுடன், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைப்பதற்காக கடந்த மாதம் புதிய குழாய்கள் கொண்டுவரப்பட்டது.
விரைந்து முடிக்க வேண்டும்
ஆனால் பணிகள் துவக்கப்படாமல் அந்த குழாய்கள் இறக்கி வைக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், முறையாக குடிநீர் விநியோகம் செய்யவும் ஏதுவாக, புதிய குடிநீர் குழாய்களை விரைவாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.