பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து விரைவாக குணமடைய வாழ்த்துக்கள் - அன்புமணி ராமதாஸ்


பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து விரைவாக குணமடைய வாழ்த்துக்கள் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:46 AM GMT (Updated: 6 Dec 2022 7:41 AM GMT)

லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

சென்னை,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில லாலு பிரசாத் யாதவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆப்பரேஷன் தியேடரில் இருந்து ஐசியு படுக்கைக்கு லாலு அழைத்து செல்லப்பட்டதாக அவரது மகனும் பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லாலு பிரசாத் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து விரைவாக குணமடைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும் , சமூக நீதி தலைவருமான லாலு பிரசாத அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து விரைவாக குணமடையவும், சுறுசுறுப்பாக பொது வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Next Story