அமமுக உடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அமமுக உடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

அமமுக உடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக அரசு மக்களிடம் செல்வாக்கை இழந்தது விட்டது. மழைநீர் வடிகால் பணிகளை அவசர அவசரமாக செய்கிறது. ஆனால் தரமான வகையில் அந்த பணிகள் நடைபெற வேண்டும். மழைநீர் வடிகால் விவகாரம் திமுக அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலேயே இல்லை.அவருக்கு சட்டப்பேரவையில் இடம் கொடுக்க கூடாது என ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் ஒதுக்கினால் சபாநாயகரின் மரபை மீறியதாக அர்த்தம்.

டிடிவி தினகரனின் தலைமையிலான அமமுகவுடன், அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் அமமுக கூட்டணி வைத்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story