உடைந்த இருக்கைகளுடன் சென்ற அரசு பஸ்-பயணிகள் அவதி


உடைந்த  இருக்கைகளுடன் சென்ற அரசு பஸ்-பயணிகள் அவதி
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் வழியாக உடைந்த இருக்கைகளுடன் சென்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி- நெல்லைக்கு இடையே பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக தினசரி 80-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பஸ்கள் போதிய பராமரிப்பின்றி செல்கின்றன. இந்த பஸ்களில் இருக்கைகள், படிக்கட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருக்கின்றன.

இந்தநிலையில் நேற்று காலை தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்ற அரசு பஸ் ஒன்றில் கடைசி வரிசையில் உள்ள இருக்கைகள் உடைந்து கிடந்தன. காலை நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருக்கும் நிலையில், இடம் இருந்தும் பயணிகள் உட்கார முடியாமல், நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். எனவே இதுபோன்ற பழுதடைந்த இருக்கைகள் கொண்ட பஸ்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



Next Story