திருமண மண்டபத்தில் புகுந்து நகை திருடிய பெண் கைது


திருமண மண்டபத்தில்  புகுந்து நகை திருடிய பெண் கைது
x

திருமண மண்டபத்தில் மணமகள் அறைக்குள் புகுந்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரை


நகை திருட்டு

சென்னை அம்பத்தூர் கொரட்டூரை சேர்ந்தவர் முரளி (வயது 48), என்ஜினீயர். இவரது அண்ணன் மகளின் திருமணம் மதுரை மாநகராட்சி அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. முதல் நாள் இரவு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் மணமகள் அறைக்கு செல்ல முயன்றார்.

அப்போது அறைக் கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அவர் கதவைத் தட்டிய போது அந்த அறையிலிருந்து பெண் ஒருவர் வெளியே வந்தார். பின்னர் அந்த அறையில் இருந்த பைகளை சோதனை செய்த போது 5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

பெண் கைது

இது குறித்து முரளி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கடச்சனேந்தல் காட்டுநாயக்கர் தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரி (39) நகையை திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story