லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது


லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது
x

லாரி உரிமையாளரிடம் பணம் பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கோவை மாவட்டம், சூலூர், காடம்பாடி, பாரதி நகரை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன்(வயது 40). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கோவையில் இருந்து ஆற்று மணல் எடுத்துச் செல்வதற்காக கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி வந்துள்ளார். அப்போது கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டி பிரிவு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் ஆனந்தகிருஷ்ணனிடம் சென்று உன்னிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டுள்ளார். அப்போது முடியாது என்று சொன்ன ஆனந்தகிருஷ்ணனிடம் நீ என்னை கையைப்பிடித்து இழுத்தாய், கற்பழிக்க முயன்றாய் என்று கத்துவேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஆனந்தகிருஷ்ணனிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அந்த பெண் தப்பி ஓடினார். இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண்ணை ஆனந்தகிருஷ்ணன் பிடித்து தென்னிலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தென்னிலை சப்- இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அந்தப் பெண் கரூர் மாவட்டம், மகாதானபுரம் அருகே உள்ள கம்மநல்லூர் காலனியைச் சேர்ந்த புஷ்பா(45) என தெரியவந்தது. இதனையடுத்து தென்னிலை போலீசார்அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story