ஓசி கமர்கட்டுக்கு அடம்பிடித்த பெண் இன்ஸ்பெக்டரும் 3 போலீசும் ...! 2 ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்...? - தீயாய் பரவும் வீடியோ
ஓசியில் கமர்கட்டு வாங்கிச் சென்ற மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 4 பெண் போலீசாரை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இரண்டு ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்? என கேள்வி எழுப்பிய பெண் காவலரின் சிசிடிவி காட்சிகள் வைரல் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக விஜயலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு ரோந்து பணிக்காக சக பெண் காவலர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது படப்பையில் உள்ள ஜூஸ் கடையில் சாக்லேட், பிரட் ஆம்லெட் , ஜூஸ் போன்றவற்றை மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க மறுத்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவல்நிலைய ஜீப் ஓட்டுநர் பெண் காவலர் ஜெயமாலா, மற்றும் இரண்டு ஆயுதப்படை பெண் காவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தாம்பரம் அடுத்த படப்பை ஜூஸ் கடையில் பணியில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவதும், கடையின் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஓசியில் ஜூஸ் கேட்டு மிரட்டுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தாம்பரம் காவல்துறை ஆணையாளர் அமுல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் இது குறித்து டீக்கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளுடன் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய கமிஷனர் அமல்ராஜ் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4-பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.