கத்தியை காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல்


கத்தியை காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x

கத்தியை காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் தனஸ்ரீ (வயது 21). இவர் உறையூரில் தான் படித்த கல்லூரிக்கு சென்று படிப்பு முடித்த சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தில்லைநகர் வடவூரை சேர்ந்த பாலமுருகன்(22), தன்னை காதலிக்க மறுப்பது குறித்து அவரை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறு செய்துள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து தனஸ்ரீ உறையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story