உளுந்தூர்பேட்டையில்பெண் போலீசிடம் நகை பறிக்க முயற்சி
உளுந்தூர்பேட்டையில் பெண் போலீசிடம் நகை பறிக்க முயன்றவரை போலீசாா் தேடி வருகின்றனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஆர்.எஸ். கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரலேகா (வயது 37). இவர் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருகிறார்.
நேற்று இரவு 7 மணி அளவில் சந்திரலேகா திருச்சி மெயின் ரோட்டில் இருந்து தனது வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சந்திரலேகா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட சந்திரலேகா அவரிடம் இருந்து தப்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
உடனடியாக அவர் கூச்சலிட்டத்தை தொடர்ந்து அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.