காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கோவில்களில் முளைப்பாரி திருவிழா நடந்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்தும் உறவினர்கள் இந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் குடிநீர் சரிவர வராததால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ஆஸ்பத்திரிக்குச் செல்லும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தது.

இந்த சம்பவம் அறிந்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜு, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முபாரக்சுல்தான், ஊராட்சி மன்ற தலைவர் பவுன்முருகன், துணைத்தலைவர் பாக்கியம்செல்வம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் முறையாக தடையின்றி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story