பூந்தமல்லி, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பூந்தமல்லி, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

பூந்தமல்லி, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜாண் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் 6 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 28 வயதிற்குளான பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் 6 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை பெற திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், இணை இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை அனுகவும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் 8-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜாண் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story