பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு முகாம்


பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு முகாம்
x

பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கடலூர்



கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுறுத்தலின்பேரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு முகாம் மகளிர் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் கடலூர் சில்வர் பீச், புதுக்குப்பம், நேரு நகர் ஆகிய இடங்களில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க இலவச உதவி எண்கள் 1098, 181, 1930 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் நெய்வேலி, சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார் சார்பிலும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.


Next Story