மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


மகளிர் உரிமைத் தொகை திட்டம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 4 Aug 2023 5:07 AM IST (Updated: 4 Aug 2023 10:27 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முதல்கட்டமாக இதுவரை 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற முகாமில் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story