மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் - திமுக எம்.பி. கனிமொழி


மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் - திமுக எம்.பி. கனிமொழி
x

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது:-

மகளிர் இடஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என்பது கண்துடைப்பு போல் இருக்கிறது.

மசோதாவை இந்த தேர்தலுக்காக கொண்டுவந்ததாக தெரியவில்லை, ஆனால் தேர்தலுக்கான ஒரு அறிவிப்பு. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்துவிட்டோம், பெண்களுக்காக நாங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறோம் என வாக்கு வங்கிக்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story