மகளிர் சுய உதவி குழு ஆலோசனை கூட்டம்


மகளிர் சுய உதவி குழு ஆலோசனை கூட்டம்
x
நாமக்கல்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான சந்திப்பு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் பிரியா தலைமை தாங்கினார். இதில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக வணிகர்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது, பொருட்களை உற்பத்தி செய்ய தேவைப்படும் மூலப் பொருட்களை எவ்வாறு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வணிகர்களிடம் பெறுவது, தயாரிக்க பொருட்களை காட்சிப்படுத்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், வினியோகிஸ்தர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் செல்போன் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story