ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு; வாலிபர் கைது


ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
x

ஊத்துக்கோட்டை அருகே கூலித்தொழிலாளியை தாக்கி செல்போன் பணம் பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேல்சிற்றப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பத் நேற்று முன்தினம் இரவு ஆரணி ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் அன்னை தெரசா நகரை சேர்ந்த சதீஷ் (21) என்பவர் தன் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சம்பத் மீது தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்து செல்போன், ரூபாய் ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து நேற்று சதீஷை கைது செய்தார். மேலும் போலீசார் சதீஷை ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story