நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
நாகர்கோவிலில், கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய தெருவை சோ்ந்தவர் கதிரவன் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் கதிரவனின் 2 கால்கள் முறிந்தன. இதற்காக அவர் பலரிடம் பணம் கடன் வாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அவருக்கு கால்கள் சரியாகவில்லை. இதனால் அவர் வேலைக்கு செல்லமுடியத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். சிகிச்சைக்கே பணம் இல்லாத நிலையில், கடனை எப்படி அடைப்பது என்ற மனவேதனையில் கதிரவன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கதிரவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் கதிரவன் தற்கொலை என்ற விபரீத முடிவை தேடி கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.