மதுவில் விஷத்தை கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
தூசி அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை
வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி (வயது 48), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி காளிமுத்து (35). இவர், செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உண்டு.
சம்பவத்தன்று அவர், தனது மனைவியிடம் மதுபானம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தராததால் மனவேதனை அடைந்த ராஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டா்ா.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story