தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2023 6:45 PM GMT (Updated: 20 May 2023 6:46 PM GMT)

குருவிகுளத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

திருவேங்கடம்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜன் தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் சங்கர நாராயணன், குருவிகுளத்தை அடுத்துள்ள துர்கா நகரில் வசித்து வரும் தங்கை லட்சுமியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் லட்சுமி விசாரித்தபோது, குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து விட்டதாகவும், அதனால் உங்களை கடைசியாக பார்ப்பதற்காக வந்துள்ளதாகவும் கூறி மயங்கி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் சங்கரநாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story