மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

காக்களூரில் மின்சாரம் தாக்கி தெழிலாளி பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் காக்களூர் ஏரிக்கரை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 38). இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு ஜனனி, ஜான்சி என்ற 2 மகள்களும், ராஜீ என்ற மகனும் உள்ளனர். சந்திரன் பன்றிகளை வளர்த்து, விற்று தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை இவர் வளர்த்து வந்த பன்றிகளை தேடி சந்திரம் திருவள்ளூர் வி.எம்.நகர் சென்றார். அங்கே இல்லாததால் அங்கிருந்து ஒரு காம்பவுன்ட் சுவர் மீது ஏறி பார்த்துள்ளார். அப்போது சுவர் மேலிருந்து அலறிக்கொண்டே கீழே விழுந்தவர் அங்குள்ள சேற்றில் முகம் புதைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சேற்றில் சிக்கி உயிரிழந்த சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பன்றியை தேடுவதற்காக சுவர் மீது ஏறி செல்லும் போது தாழ்வாக சென்றுக்கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது சுவர் மீது ஏறி செல்லும் போது தவறி சேற்றில் விழுந்து இறந்தாரா என இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் மேகநாதன் (65). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் அருகே மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார். மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே போடப்பட்டு இருந்த தார் சாலை சுரண்டி எடுக்கப்பட்டு இருந்தது. இது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மேகநாதன், சாலையில் நிலைதடுமாறி விழுந்தார்.

அப்போது அவர் மீது லாரி ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மேகநாதன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story