நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரெயில் மோதி தொழிலாளி பலி


நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரெயில் மோதி தொழிலாளி பலி
x

நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.

சென்னை

சென்னை செனாய் நகர், வெங்கடாசலபதி முதல் தெருவை சேர்ந்தவர் முனிவேல் (வயது 50). இவர், சூளைமேடு பகுதியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே முனிவேல் மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முனிவேலின் மகள் திவ்யா (26) நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மகள் திவ்யாவை தினமும் முனிவேல்தான் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் மகளை அழைக்க சென்றார். ஆனால் அவர் வேலைக்கு வரவில்லை என ஊழியர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் தண்டவாளம் அருகே முனிவேல் பிணமாக மீட்கப்பட்டார். ஏற்கனவே மகளின் திருமண விவகாரத்தில் மனஉளைச்சலில் இருந்த முனிவேல் தற்போது மகள் மாயமானதால் விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு பலியானாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story