உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி


உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி
x

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கலெக்டர் தலைமையில் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவ சங்கங்கள், இந்திலி டாக்டர்.ஆர்கே.எஸ்.ஹெல்த் ஆப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மற்றும் நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். பேரணியானது மந்தவெளியில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி ரோடு, நான்கு முனை சந்திப்பு, சேலம் மெயின் ரோடு, கடைவீதி வழியாக மீண்டும் மந்தவெளி சென்றடைந்தது. இதில், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story