வேலூருக்கு செல்ல இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை..!


வேலூருக்கு செல்ல இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை..!
x

கும்பகோணம் அருகே சிற்பி ஒருவர் வடிவமைத்த உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே திம்மகுடியில் சிற்பி ஒருவர் வடிவமைத்த உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சோழர்கால பாரம்பரிய ஆகமவிதி முறையில் நடராஜர் சிலை ஒன்று கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரதராஜன் என்ற சிற்பி சுமார் 10 ஆண்டு காலமாக இந்த சிலையை வடிவமைத்துள்ளார். 23 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட இந்த சிலை 15 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இது ஒரே வார்ப்பில் ஐம்பொன் சிலையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சிலையில் 51 தீச்சுடர்கள், 56 பூதகணங்கள்,102 தாமரை மலர்களையும், 34 நாகங்களின் உருவங்களை கொண்டும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பொருத்தும் பணி, 2 கிரேன்கள் உதவியுடன் நடைபெற்றது.

இந்த சிலை வரும் திங்கட்கிழமை அன்று வேலூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்க உள்ளார்.


Next Story