ஆடிப்பூர விழாவையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பெண்கள் சாமி தரிசனம்


ஆடிப்பூர விழாவையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பெண்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 23 July 2023 1:00 AM IST (Updated: 23 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி

ஆடிப்பூர விழாவையொட்டி தர்மபுரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூர விழா

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வளையல் காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு வளையல் அலங்கார சேவை, வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு வளையல் உள்ளிட்ட சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசு தேவ பெருமாள் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வளையல் காப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

குமாரசாமிப்பேட்டை

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கடைவீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்கார சேவை நடைபெற்றது. விழாவையொட்டி சீர்தட்டு வரிசை அழைப்பு நிகழ்ச்சியும், வளைகாப்பு விழாவும் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஆடிப்பூர விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அஷ்ட வராகி அம்மன்

காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story