115 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிலக்கோட்டை பகுதிகளில் 115 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
திண்டுக்கல்
இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் நிலக்கோட்டை, கொடைரோடு, விளாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி தினத்தில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மொத்தம் 115 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் அடுத்த நாள் விநாயகர் சிலைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story