சிங்கம்புணரி பகுதியில் 49 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு


சிங்கம்புணரி பகுதியில் 49 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

சிங்கம்புணரி பகுதியில் 49 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் இன்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பகுதியில் 49 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் இன்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி

சிங்கம்புணரி பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் ஒவ்வொரு பகுதிகளிலும் வைத்து பூஜிக்கப்பட்டு பின்பு சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சேவகபெருமாள் அய்யனார் கோவில் முன்பு உள்ள தெப்பத்தில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடந்தது.

இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல விழா குழுவினர், பொதுமக்கள் ஒன்றிணைந்து சிங்கம்புணரி நகர், மணப்பட்டி, மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, வேட்டையன்பட்டி, வேங்கைபட்டி ஆகிய பகுதிகில் மொத்தம் 49 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

இன்று கரைக்கப்படுகிறது

தொடர்ந்து விநாயகர் சிலைகளின் கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை நடந்தது. இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்வாறு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று(புதன்கிழமை) சிங்கம்புணரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள சீரணி அரங்கில் இருந்து மாலை 7 மணி அளவில் ஊர்வலமாக புறப்படுகிறது. முன்னதாக இந்து சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடக்கிறது.

பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது என விழா குழு தலைவர் மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் பொன்னையா, விழா குழு செயலாளர்கள், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் கண்ணையா, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, இந்து முன்னணி ஒன்றிய பொது செயலாளர் விஜய் ஆகியோர் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story