"நான் இருக்கிறேன்... தைரியமாக தேர்வு எழுதுங்கள்" - மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு


நான் இருக்கிறேன்... தைரியமாக தேர்வு எழுதுங்கள் - மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
x

தஞ்சை அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களிடம் தைரியமாக தேர்வு எழுதுமாறு உற்சாகமூட்டினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தேர்வறைக்குச் சென்ற அவரை, மாணவர்கள் வரவேற்று வணக்கம் தெரிவித்தனர்.

தேர்வு எழுதுவதற்கு தயாராக இருந்த மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கலகலப்பாக உரையாடிய அன்பில் மகேஷ், "நான் இருக்கிறேன், தைரியமாக தேர்வு எழுதுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உற்சாகமூட்டினார்.

1 More update

Next Story