4 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


4 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x

திருவல்லிக்கேணியில் 4 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலை துலுக்கானம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 41). ஐஸ் வியாபாரி. கடந்த 22-ந்தேதி இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (33) என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 திருட்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகே 9 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஷீபா ஜோதி (31) பாஸ்கர் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story