மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது


மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது
x

உளுந்தூர்பேட்டை அருகே மின்மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையை அடுத்த கூந்தலூர் கிராமம் பெருமாள் கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்த மின் மோட்டாரை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி(வயது 53) எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விமல்(23) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான மின் மோட்டாரை திருடியதோடு, உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ்நகரில் உள்ள ஒரு வீ்ட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விமலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மின்மோட்டார் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story