பணம், செல்போன் திருடிய வாலிபர் கைது


பணம், செல்போன் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் மற்றும் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், இளங்கோவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கண்டாச்சிபுரம் அருகே உள்ள தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி (வயது 20) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான சென்னையை சேர்ந்த பால்ராஜ் உள்பட 2 பேருடன் சேர்ந்து

வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்த மெல்கியோர் (68) என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் பால்ராஜ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story