மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் நீலகண்டன் (வயது 33). விவசாயி. இவர் அந்த கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் மீன்குட்டை வைத்து மீன் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை விவசாய நிலத்திற்கு அருகே நிறுத்திவிட்டு, மீன் குட்டைக்கு தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் ராம்ராஜ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை நைசாகி திருடிச்சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ராம்ராஜை பிடிக்க முயன்றார். இருப்பினும் அதற்குள் மோட்டார் சைக்கிளுடன் ராம்ராஜ் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.