ஆரணியில் கஞ்சா-பட்டா கத்தியுடன் சிக்கிய வாலிபர் கைது


ஆரணியில் கஞ்சா-பட்டா கத்தியுடன் சிக்கிய வாலிபர் கைது
x

ஆரணியில் கஞ்சா-பட்டா கத்தியுடன் சிக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியை மேற்கொண்டனர். ஆரணி, சுப்பிரமணிய நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது சுமார் 1,200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார். மேலும், 2 அடி உயரம் கொண்ட பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தார்.

பிடிபட்ட அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த வாலிபர் பெயர் கார்த்திகேயன் (வயது 21) என்பதும், அவர் ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை பகுதியில் திருவாலாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அருள்பாண்டியனை (27) போலீசார் கைது செய்தனர்.


Next Story