திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்


திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி - மாடு குறுக்கே வந்ததால் பரிதாபம்
x

திருத்தணி அருகே மாடு குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சீபாடி கிராமத்தை சேர்ந்தவர் டில்லி. இவரது மகன் பவுன் (வயது 24). ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் தினமும் காலையில் திருத்தணி மார்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி கொண்டு புத்தூர் செல்வது வழக்கம்.

இதேபோல் நேற்று முன்தினம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். தனியார் சொகுசு விடுதி அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று பாய்ந்துள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத பவுன் மாடு மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story