அயப்பாக்கம் ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு


அயப்பாக்கம் ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
x

அயப்பாக்கம் ஏரியில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மகன் அருணாச்சலம் (வயது 22). நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அருணாச்சலம், அதன்பிறகு மாயமாகிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். நேற்று காலை அயப்பாக்கம் ஏரியில் அருணாச்சலம் பிணமாக கிடந்தார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலம் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story