இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு


இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 11 Nov 2022 11:36 AM GMT (Updated: 11 Nov 2022 11:47 AM GMT)

இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, பிரதமர் மோடி பேசியதாவது:-

வணக்கம் என தமிழில் கூறி கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி. என்ற முழக்கத்துடன் உரையை தொடங்கினார் பிரமர் மோடி

மிகவும் முக்கியமான காலத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள். பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம் இது. இயற்கை மற்றும் எளிமையான வாழ்க்கையில் காந்தியின் கொள்கைகளை பார்க்க முடியும். மற்றவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்கு காரணம்.

இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிராம வளர்ச்சிக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும். கிராமம் நகரம் என்ற வேறுபாடு தற்போது இல்லை. கிராமங்கள் வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயம் நாட்டின் உர தேவையை குறைக்கும்.

கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 % அதிகரித்துள்ளது. கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி 200 % அதிகரித்துள்ளது.

கிராமங்கள் சுயமாக செயல்பட்டால், நாடும் சுயமாக செயல்பட முடியும். கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால் பிரச்சினைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம். கடந்தாண்டு 1 லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளியாக தமிழ்நாடு இருந்தது.

தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவை கொண்டாடப்படும். பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது; இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது.

"பெண்களின் வெற்றி, தேசத்தின் வெற்றி"

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story