கோவையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலில் 6 பேர் காயம்
கோவை, மாவட்டம் சரவணம்பட்டியில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி எஸ்எஸ்ஐ உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை,
பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. யுவன் ஷங்கர் ராஜாவின் நிகழ்ச்சியை காண்பதற்காக அங்கு பலர் திரண்டர்.
அப்போது கூட்ட நெரிசல் அதிகமானதால் பெண் எஸ்ஐ உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர். இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எஸ்.எஸ்.ஐ உட்பட ஐந்து பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story