‘தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும்’ கே.எஸ்.அழகிரி பேட்டி


‘தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும்’ கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 3 March 2021 3:05 AM GMT (Updated: 3 March 2021 3:05 AM GMT)

‘தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும்’ கே.எஸ்.அழகிரி பேட்டி.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சி எந்தந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தையின் போது அது பற்றி பேசப்படும். தொகுதி பங்கீட்டு சுமுகமாக முடிவடையும்.

நிச்சயமாக தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்குவது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story