'தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு' டி.டி.வி.தினகரன் பேட்டி


தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2021 3:36 AM GMT (Updated: 3 March 2021 3:36 AM GMT)

தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு என டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது

கேள்வி:- அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ உங்களை கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கிறதா?

பதில்:- இன்னொரு கட்சி எங்களை வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்து பேச வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. எங்கள் தலைமையில் கூட்டணிக்காக நாங்கள் பல கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது என்று வெளிப்படையாக கூற முடியுமா?

பதில்:- தேர்தல் நெருங்குகிறது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான். அதற்கான முயற்சிகளை நான் செய்து வருகிறேன்.

அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு?

கேள்வி:- தி.மு.க.வை தோற்கடிப்பதற்காக அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் சேர்வதற்கு தயார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- அப்படி அல்ல. எங்கள் தலைமையை ஏற்று யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கிற எந்த கட்சியாக இருந்தாலும் எங்கள் தலைமையின் கீழ் வந்தால் அவர்களுடன் பேசத் தயார்.

கேள்வி:- அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணைப்புக்கான வேலைகள் எந்த அளவிற்கு முடிந்து உள்ளது?

பதில்:- எனக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் பதில் அளித்தார்.

Next Story