தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு இன்று ஆலோசனை


தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 4 March 2021 8:46 AM IST (Updated: 4 March 2021 8:46 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு இன்று ஆலோசனை.

சென்னை, 

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 தொகுதிகள் கேட்கிறது. தி.மு.க. தரப்பில் 4 முதல் 6 தொகுதிகள் வரை வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இருகட்சிகளும், தங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்திக்கொண்டனர். தி.மு.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று காலை நடைபெற உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த தகவல் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஒப்புதலோடு தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகள் எண்ணிக்கையை ஏற்பது என்று முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தி.மு.க-இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடையே இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story