புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பாஜக இடையே நீடிக்கும் இழுபறி!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 March 2021 11:11 AM GMT (Updated: 4 March 2021 11:21 AM GMT)

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி தேர்தலில் களம் காணும் என கூறப்பட்ட நிலையில், கூட்டணி அறிவிப்பு மற்றும் தொகுதிப் பங்கீட்டில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதில், உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்த என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

ஆனால் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சரை தேர்வு செய்யலாம் என்று பாஜக யோசனை தெரிவிக்கிறது. இதனால் மூன்று கட்டமாக பாஜகவிற்கும், என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற சூழ்நிலையிலும் இதுவரை உடன்பாடு உறுதி செய்யப்படவில்லை. 

இந்த சூழலில் பாஜக அலுவலகத்தில், மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தலைமையில், மேலிடப் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, நிர்மல்குமார் சுரானா, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகிகள், கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story