சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு மண்டலத்தில் மேலும் 100 ரவுடிகள் கைது


சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு மண்டலத்தில் மேலும் 100 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 5 March 2021 8:36 AM IST (Updated: 5 March 2021 8:36 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை வேட்டையாடி பிடிக்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

சட்டசபை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை வேட்டையாடி பிடிக்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவரது கட்டுப்பாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் ரவுடிகள் வேட்டையாடி பிடிக்கப்பட்டு வருகிறார்கள். கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டனர். நேற்று அதிகாலை முதல் மீண்டும் ரவுடிகள் வேட்டை நடந்தது. அந்த நடவடிக்கையில், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். தேர்தல் அமைதியாக நடக்க இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.

Next Story