திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ள நிலையில், 6 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்கெனவே 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு அடைந்துள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கே பாலகிருஷ்ணன் “திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இன்று மாலை நடைபெறும் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை” என்றார்.
Related Tags :
Next Story