தொகுதி கண்ணோட்டம்: மங்களம் (புதுச்சேரி)


தொகுதி கண்ணோட்டம்: மங்களம் (புதுச்சேரி)
x
தினத்தந்தி 7 March 2021 11:48 AM IST (Updated: 7 March 2021 11:48 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது உருவானதுதான் மங்களம் தொகுதி. இந்த தொகுதியானது இதுவரை 2 சட்டமன்ற தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது.

கணுவாப்பேட்டை, உறுவையாறு, திருக்காஞ்சி, சாத்தமங்கலம், மங்களம், சிவராந்தகம், கீழுர், கோட்டமேடு என நகரம் மற்றும் கிராம பகுதிகள் இணைந்து மங்களம் தொகுதியாக மாறியுள்ளது. 

விவசாயம் இந்த தொகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொகுதியில் பெரும்பான்மை மக்களாக வன்னியர் சமுதாயத்தினரே உள்ளனர்.

தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் தொழிற்பேட்டைகள் ஏதும் இல்லை. தொழிற்சாலைகள் உருவாக தேவையான இடவசதி உள்ள தொகுதியாக இது உள்ளது. அதிக அளவில் மக்கள் இங்கு விவசாயம்தான் செய்து வருகின்றனர். இதனால் போதிய வருமானம் இல்லாத நிலை உள்ளது.

தொகுதியில் எந்த தேவைக்கும் வில்லியனூருக்கு வரவேண்டிய நிலைதான் இங்கு உள்ளது. விவசாயிகளுக்கு போதிய சலுகைகள் வழங்கவேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதிக அளவில் இங்கு வன்னியர் சமுதாய மக்களே வசிக்கின்றனர். குறைந்த அளவில் ஆதிதிராவிட மக்கள் உள்ளனர். பிற சமுதாயத்தினர் பெரிய அளவில் இங்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வென்றது. இந்த தேர்தலில் இந்த தொகுதியில் கடும் போட்டியிருக்கும்.

கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மங்கலம் (என்.ஆர்.காங். வெற்றி)

மொத்தவாக்குகள் -34,819

பதிவான வாக்குகள் -31,283

1.சுகுமாரன் (என்.ஆர்.காங்.) -13,955

2.குமாரவேல் (தி.மு.க.) -8,392

3.நடராஜன் (அ.தி.மு.க.) -7,124

4.ஏழுமலை (ம.தி.மு.க.) -314

5.லட்சுமி (பா.ஜனதா) -272

6.பாலமுருகன் (சுயே) -181

7.சுகுமாரன் (சுயே) -178

8.முருகேசன் (சுயே) -105

9.பாக்கியராஜ் (என்.டி.கே.) -104

10.அலங்காரவேலு (பகுஜன்சமாஜ்)-103

11.முருகன் (கம்யூ.எம்.எல்.) -95

12.ஹரிதாஸ் (சுயே) -42

13.மகாதேவன் (ஏ.ஐ.எம்.கே.) -33

14.காசிநாதன் (ஐ.ஜே.கே.) -19

நோட்டா -366

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு

2011-தேனீ.ஜெயக்குமார் -காங்

2016-சுகுமாரன் -என்.ஆர்.காங்.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 38004

ஆண்கள் - 18131

பெண்கள் - 19863

மூன்றாம் பாலினத்தவர் - 10

Next Story