மேற்கு மாம்பலத்தில் பா.ஜ.க. சார்பில் ‘வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம்’ பேரணி


மேற்கு மாம்பலத்தில் பா.ஜ.க. சார்பில் ‘வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம்’ பேரணி
x
தினத்தந்தி 8 March 2021 3:17 AM IST (Updated: 8 March 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகர் அயோத்தியா மண்டபத்தில் இருந்து வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம் பேரணி நேற்று நடந்தது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகர் அயோத்தியா மண்டபத்தில் இருந்து வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம் பேரணி நேற்று நடந்தது. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார பிரிவு தலைவர் தனஞ்செயன் தொடங்கி வைத்தார். பேரணி பிருந்தாவன் தெரு, சம்பையாரெட்டி ரோடு வழியாக மேற்கு மாம்பலம் பைவ் லைட் சென்றடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசும் போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் குறித்தும், அதனால் பயனடைந்த பொதுமக்கள் குறித்தும் எடுத்து கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் பிரமிளா சம்பத், தென் சென்னை மாவட்ட தலைவர் சைதை சந்துரு உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.

Next Story