சட்டமன்றத் தேர்தல்: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 March 2021 1:36 PM GMT (Updated: 2021-03-08T19:06:48+05:30)

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதன்படி தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25, வி.சி.க, ம.தி.முக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story