எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு: ஜோதிமணி டுவிட்


எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு: ஜோதிமணி டுவிட்
x
தினத்தந்தி 9 March 2021 7:54 AM GMT (Updated: 9 March 2021 7:54 AM GMT)

எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  குறைவான தொகுதிகளாக இருந்தாலும் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் கட்சியினர்  கூறினர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எண்ணிக்கை குறித்த வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு. இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் முறையாக, கூட்டாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெறுவது. வெற்றி வாய்ப்பு, தகுதி, கட்சி விசுவாசம் மிகுந்த வேட்பாளர்களை நிறுத்துவது. தமிழக விரோத பிஜேபி, அதிமுகவை வெல்வது" என்று பதிவிட்டுள்ளார்.

Next Story