தேர்தல் பிரசாரத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தால் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை
தேர்தல் பிரசாரத்துக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தால் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு.
சென்னை,
தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பொதுக்கூட்டத்துக்கோ அல்லது தேர்தல் பிரசார கூட்டத்துக்கோ பொதுமக்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வந்தால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். இதன்பின்பு, வாகன உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம்.
அதுமட்டுமல்லாமல் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யவும், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story