முதல் முறையாக அறிமுகம் ‘ஆன்-லைன்’ மூலம் வேட்புமனு தாக்கல்


முதல் முறையாக அறிமுகம் ‘ஆன்-லைன்’ மூலம் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 10 March 2021 10:14 PM GMT (Updated: 10 March 2021 10:14 PM GMT)

புதுவை மாநிலத்தில் முதல் முறையாக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை ஆன்-லைன் மூலமாக தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் முதல் முறையாக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை ஆன்-லைன் மூலமாக தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜசேகர் கூறியதாவது:-

ஆன்-லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்ய suvida.eci.gov.in. என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். முதலில் செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு முறை கடவுச்சொல் ஒன்று வரும். அதன்பின் உள்ளே சென்று அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வேட்புமனுவை பூர்த்தி செய்யலாம். இதேபோல் பிரமாணப் பத்திரத்தையும் இதன் மூலம் பூர்த்தி செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணத்தையும் செலுத்த முடியும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது அதனை தேர்தல் நடத்தும் அதிகாரி பார்வையிட முடியும். இதன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்அனுமதி பெற முடியும்.

ஆன்-லைன் மூலம் வேட்புமனுக்களை பூர்த்தி செய்வது கட்டாயம் கிடையாது. விருப்பப்படுபவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். பழைய முறையும் வழக்கம் போல் நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story