2 எம்.பி.க்களுக்கு போட்டியிட வாய்ப்பு 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
தமிழக சட்டசபை தேர்தலில் 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 2 எம்.பி.க்களும் இடம் பெற்று உள்ளனர்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
அ.தி.மு.க. பட்டியல்
இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. (ஸ்ரீவைகுண்டம்), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை-தனி) ஆகிய 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றன.
இதற்கிடையில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் அ.தி.மு.க. தீவிரமானது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை பல கட்டங்களாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது.
இந்தநிலையில் அ.தி. மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை
இந்த பட்டியலில் 171 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கு, அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போதைய அமைச்சர்கள் 3 பேருக்கு 'சீட்' வழங்கப்படவில்லை. அந்த வகையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் (வாணியம்பாடி), கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சர் ஜி.பாஸ்கரன் (சிவகங்கை), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்) ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் செம்மலை (மேட்டூர்), ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), பிரபு (கள்ளக்குறிச்சி), நரசிம்மன் (திருத்தணி), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை) உள்பட தற்போதுள்ள 41 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதில் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மனும் அடங்குவார். இவர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை வெற்றியடைய விடமாட்டேன் என்று பகிரங்கமாக பொதுமேடையில் கூறியவர் ஆவார். அதேபோல கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு கல்லூரி மாணவியை திருமணம் செய்ததால் பிரபலமானார்.
அதேவேளை ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்தமுறை சிவகாசியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.
கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் போட்டி
2 எம்.பி.க்களுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது. அதன்படி, கே.பி.முனுசாமி வேப்பனப்பள்ளி தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது நாடாளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக உள்ளனர். தற்போதைய அமைச்சர்கள் 27 பேருக்கும், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, டி.கே.எம்.சின்னையா உள்பட முன்னாள் அமைச்சர்கள் 17 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கு.ப.கிருஷ்ணனுக்கு, தற்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர் வளர்மதியின் ஸ்ரீரங்கம் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு போளூர் தொகுதியும், பா.வளர்மதிக்கு ஆலந்தூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு பல்லடம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமிக்கு வாய்ப்பு
இதேபோல பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 177 வேட்பாளர்களில் 14 பேர் பெண்கள் ஆவார்கள். அதேபோல 2 வேட்பாளர்கள் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் இந்த வேட்பாளர் பட்டியலில் 82 பட்டதாரிகள், 17 வக்கீல்கள், 12 என்ஜினீயர்கள், 3 டாக்டர்கள், ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
வேட்பாளர்கள் விவரம்
அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலின் விவரம் வருமாறு:-
பொன்னேரி (தனி) - சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. (திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்)
திருத்தணி - திருத்தணி கோ.அரி (முன்னாள் எம்.பி., அமைப்பு செயலாளர்)
திருவள்ளூர் - பி.வி.ரமணா (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)
அமைச்சர் பாண்டியராஜன்
ஆவடி - அமைச்சர் க.பாண்டியராஜன் (கொள்கை பரப்பு துணை செயலாளர்)
மதுரவாயல் - அமைச்சர் பா.பென்ஜமின் (திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர்)
அம்பத்தூர் - வி.அலெக்சாண்டர் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்)
மாதவரம் - மாதவரம் வி.மூர்த்தி (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்)
திருவொற்றியூர் - கே.குப்பன் (முன்னாள் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர்)
ஆர்.கே.நகர் - ஆர்.எஸ்.ராஜேஷ் (வடசென்னை வடக்கு-கிழக்கு மாவட்ட செயலாளர்)
கொளத்தூர் - ஆதி ராஜாராம் (அமைப்பு செயலாளர், தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர்)
வில்லிவாக்கம் - ஜே.சி.டி.பிரபாகர் (முன்னாள் எம்.எல்.ஏ., வழிகாட்டுக்குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர், செய்தி தொடர்பாளர்)
அண்ணாநகர் - கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர், செய்தி தொடர்பாளர்)
விருகம்பாக்கம் - வி.என்.ரவி எம்.எல்.ஏ. (தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர்)
சைதை துரைசாமி
சைதாப்பேட்டை - சைதை துரைசாமி (முன்னாள் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்)
தியாகராயநகர் - பி.சத்தியநாராயணன் என்ற தி.நகர் சத்யா எம்.எல்.ஏ. (தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர்)
மயிலாப்பூர் - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. (டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர்)
வேளச்சேரி - எம்.கே.அசோக் (முன்னாள் எம்.எல்.ஏ., தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர்)
சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன் (முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை புறநகர் மாவட்ட செயலாளர்)
ஆலந்தூர் - பா.வளர்மதி (முன்னாள் அமைச்சர், தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், இலக்கிய அணி செயலாளர், செய்தி தொடர்பாளர்)
ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே.பழனி எம்.எல்.ஏ. (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்)
சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்
பல்லாவரம் - சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் (முன்னாள் எம்.பி., செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்)
தாம்பரம் - டி.கே.எம்.சின்னையா (முன்னாள் அமைச்சர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்)
செங்கல்பட்டு - கஜா என்கிற கஜேந்திரன் (காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்)
செய்யூர் (தனி) - எஸ்.கணிதாசம்பத் (தலைமை செயற்குழு உறுப்பினர், மகளிர் அணி இணை செயலாளர்)
மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல் (முன்னாள் எம்.பி., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)
உத்திரமேரூர் - வி.சோமசுந்தரம் (முன்னாள் அமைச்சர், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்)
அரக்கோணம் (தனி) - சு.ரவி எம்.எல்.ஏ. (ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்)
காட்பாடி - வி.ராமு (குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர்)
ராணிப்பேட்டை - எஸ்.எம்.சுகுமார் (ராணிப்பேட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர்)
வேலூர் - எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்)
கே.பி.முனுசாமி
அணைக்கட்டு - த.வேலழகன் (தலைவர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்)
குடியாத்தம் (தனி) - ஜி.பரிதா (பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய இணைச்செயலாளர்)
வாணியம்பாடி - ஜி.செந்தில்குமார் (ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர்)
ஆம்பூர் - கே.நஜர்முகம்மத் (ஆம்பூர் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர்)
ஜோலார்பேட்டை - அமைச்சர் கே.சி.வீரமணி (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்)
ஊத்தங்கரை (தனி) - டி.எம்.தமிழ்செல்வம் (மத்தூர் ஒன்றிய இலக்கிய அணி துணைச்செயலாளர்)
பர்கூர் - ஏ.கிருஷ்ணன் (காவேரிபட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர்)
கிருஷ்ணகிரி - கே.அசோக்குமார் (முன்னாள் எம்.பி., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்)
வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி எம்.பி. (முன்னாள் அமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்)
கே.பி.அன்பழகன்
ஓசூர் - எஸ்.ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி (ஓசூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் வார்டு உறுப்பினர்)
பாலக்கோடு - அமைச்சர் கே.பி.அன்பழகன் (தர்மபுரி மாவட்ட செயலாளர்)
பாப்பிரெட்டிபட்டி - ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. (தர்மபுரி வடக்கு ஒன்றிய செயலாளர்)
அரூர் (தனி) - வி.சம்பத்குமார் எம்.எல்.ஏ. (அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர்)
செங்கம் (தனி) - எம்.எஸ்.நயினாக்கண்ணு (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொருளாளர்)
கலசபாக்கம் - வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. (கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர்)
போளூர் - அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (விவசாய பிரிவு செயலாளர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்)
ஆரணி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் (அமைப்பு செயலாளர்)
செய்யார் - தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்)
திண்டிவனம் (தனி) - பி.அர்ஜூனன் (மரக்காணம் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி)
வானூர் (தனி) - எம்.சக்ரபாணி எம்.எல்.ஏ. (விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்)
விக்கிரவாண்டி - எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. (காணை மேற்கு ஒன்றிய செயலாளர்)
உளுந்தூர்பேட்டை- ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ (கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்)
ரிஷிவந்தியம் - ஏ.சந்தோஷ் (திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்)
கள்ளக்குறிச்சி (தனி) - எம்.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர்)
கங்கவல்லி (தனி) - ஏ.நல்லதம்பி (கோவிந்தம்பாளையம் ஊராட்சி தலைவர்)
ஆத்தூர் (தனி) - ஏ.பி.ஜெயசங்கரன் (தலைவர், ஆத்தூர் அண்ணா வீடு கட்டும் கூட்டுறவு சங்கம், ஆத்தூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
ஏற்காடு (எஸ்.டி.) - கு.சித்ரா எம்.எல்.ஏ. (பொதுக்குழு உறுப்பினர்)
ஓமலூர் - ஆர்.மணி (ஓமலூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்)
சங்ககிரி - எஸ்.சுந்தரராஜன் (சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலாளர்)
பி.தங்கமணி
சேலம் வடக்கு - ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்)
சேலம் தெற்கு - இ.பாலசுப்ரமணியன் (சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர்)
வீரபாண்டி - எம்.ராஜா என்ற ராஜமுத்து (பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)
ராசிபுரம் (தனி) - அமைச்சர் டாக்டர் வி.சரோஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்)
சேந்தமங்கலம் - எஸ்.சந்திரன் (கொல்லிமலை ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர்)
நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. (நாமக்கல் நகர செயலாளர்)
பரமத்திவேலூர் - எஸ்.சேகர் (கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளர்)
திருச்செங்கோடு - பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ., (பொதுக்குழு உறுப்பினர்)
குமாரபாளையம் - அமைச்சர் பி.தங்கமணி (வழிகாட்டு குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர்)
கே.ஏ.செங்கோட்டையன்
ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்)
காங்கேயம் - ஏ.எஸ்.ராமலிங்கம் (திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர், வேலம்பாளையம் ஊராட்சி தலைவர்)
பெருந்துறை - ஜே.கே. என்ற எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சண்முகபுரம் கிளை செயலாளர்)
பவானி - அமைச்சர் கே.சி.கருப்பணன் (ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்)
அந்தியூர் - கே.எஸ்.சண்முகவேல் (மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்)
கோபிசெட்டிபாளையம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (அமைப்பு செயலாளர்)
பவானிசாகர் (தனி) - ஏ.பண்ணாரி (பெரியகாளிப்பட்டி ஊராட்சி கிளை செயலாளர்)
கூடலூர் (தனி) - பொன்.ஜெயசீலன் (தோட்ட தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர்)
குன்னூர் - கப்பச்சி டி.வினோத் (நீலகிரி மாவட்ட செயலாளர்)
மேட்டுப்பாளையம் - ஏ.கே.செல்வராஜ் (முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி., அமைப்பு செயலாளர்)
ப.தனபால், எஸ்.பி.வேலுமணி
அவினாசி (தனி) - சபாநாயகர் ப.தனபால்
திருப்பூர் வடக்கு - கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. (திருப்பூர் ஒன்றிய செயலாளர்)
திருப்பூர் தெற்கு - எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. (திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)
பல்லடம் - எம்.எஸ்.எம்.ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்)
சூலூர் - வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. (சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்)
கவுண்டம்பாளையம் - பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. (கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்)
கோவை வடக்கு - அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்)
தொண்டாமுத்தூர் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (வழிகாட்டு குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்)
சிங்காநல்லூர் - கே.ஆர்.ஜெயராம் (கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)
கிணத்துக்கடவு - செ.தாமோதரன் (முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்)
பொள்ளாச்சி - துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் (தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர்)
வால்பாறை (தனி) - தி.க.அமுல்கந்தசாமி (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர், கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்)
உடுமலைப்பேட்டை - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், அமைப்பு செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்)
மடத்துக்குளம் - சி.மகேந்திரன் (முன்னாள் எம்.பி., திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்)
பழனி - கே.ரவிமனோகரன் (அ.தி.மு.க. உறுப்பினர்)
ஒட்டன்சத்திரம் - என்.பி.நடராஜ் (ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்)
நத்தம் விசுவநாதன்
நத்தம் - நத்தம் ஆர்.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்)
திண்டுக்கல் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் (வழிகாட்டு குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)
வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. (இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர்)
கரூர் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர் மாவட்ட செயலாளர்)
கிருஷ்ணராயபுரம் (தனி) - என்.முத்துக்குமார் என்ற தானேஷ் (கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்)
குளித்தலை - என்.ஆர்.சந்திரசேகர் (தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர்)
மணப்பாறை - இரா.சந்திரசேகர் எம்.எல்.ஏ., (மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர்).
ஸ்ரீரங்கம் - கு.ப.கிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்).
திருச்சி மேற்கு - வி.பத்மநாதன் (திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்).
திருச்சி கிழக்கு - அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் (திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்).
திருவெறும்பூர் - ப.குமார் (முன்னாள் எம்.பி., திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்).
லால்குடி - டி.ராஜாராம் (புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர்).
மணச்சநல்லூர் - மு.பரஞ்ஜோதி (முன்னாள் அமைச்சர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்).
முசிறி - எம்.செல்வராசு எம்.எல்.ஏ. (ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்).
துறையூர் (தனி) - த.இந்திராகாந்தி (முன்னாள் எம்.எல்.ஏ., திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளர்).
குன்னம் - ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்).
ஓ.எஸ்.மணியன்
அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன் (அரசு தலைமை கொறடா, அரியலூர் மாவட்ட செயலாளர்).
பண்ருட்டி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன் (முன்னாள் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர்).
கடலூர் - அமைச்சர் எம்.சி.சம்பத் (கடலூர் மத்திய மாவட்ட செயலாளர்).
குறிஞ்சிப்பாடி - ராம பழனிசாமி (கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்).
புவனகிரி - ஆ.அருண்மொழிதேவன் (முன்னாள் எம்.பி., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்).
சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்).
காட்டுமன்னார் கோவில் (தனி) - என்.முருகுமாறன் எம்.எல்.ஏ., (அமைப்பு செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்).
சீர்காழி (தனி) - பி.வி.பாரதி எம்.எல்.ஏ., (மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர்).
பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ் எம்.எல்.ஏ., (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்).
நாகப்பட்டினம் - தங்க கதிரவன் (நாகப்பட்டினம் நகர செயலாளர்).
வேதாரண்யம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர்).
திருத்துறைப்பூண்டி (தனி) - சி.சுரேஷ்குமார் (அ.தி.மு.க. உறுப்பினர்).
மன்னார்குடி - சிவா.ராஜமாணிக்கம் (மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்).
சி.விஜயபாஸ்கர்
திருவாரூர் - ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் (திருவாரூர் மாவட்ட பொருளாளர், மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர்).
நன்னிலம் - அமைச்சர் ஆர்.காமராஜ் (கட்சி வழிகாட்டு குழு உறுப்பினர், திருவாரூர் மாவட்ட செயலாளர்).
திருவிடைமருதூர் (தனி) - யூனியன் எஸ்.வீரமணி (திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய துணை செயலாளர்).
பாபநாசம் -கே.கோபிநாதன் (பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்).
ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. (கட்சி துணை ஒருங்கிணைப்பாளர், அமைப்பு செயலாளர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்).
பேராவூரணி - எஸ்.வி.திருஞானசம்பந்தம் (முன்னாள் எம்.எல்.ஏ., தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர்).
கந்தர்வகோட்டை (தனி) - எஸ்.ஜெயபாரதி (தீத்தான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர்).
விராலிமலை - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்).
புதுக்கோட்டை - வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (முன்னாள் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர்).
திருமயம் - பி.கே.வைரமுத்து (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்).
ஆலங்குடி - தர்ம.தங்கவேல் (அ.தி.மு.க. உறுப்பினர்).
அறந்தாங்கி - எம்.ராஜநாயகம் (முன்னாள் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர்).
திருப்பத்தூர் - மருது அழகுராஜ் (செய்தி தொடர்பாளர்).
சிவகங்கை - பி.ஆர்.செந்தில்நாதன் (முன்னாள் எம்.பி., சிவகங்கை மாவட்ட செயலாளர்).
மானாமதுரை (தனி) - எஸ்.நாகராஜன் எம்.எல்.ஏ. (பொதுக்குழு உறுப்பினர்).
செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்
மேலூர் - பி.பெரியபுள்ளான் என்கிற செல்வம் எம்.எல்.ஏ. (மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்).
மதுரை கிழக்கு - ஆர்.கோபாலகிருஷ்ணன் (முன்னாள் எம்.பி., கட்சி வழிகாட்டுதல் குழு உறுப்பினர், தேர்தல் பிரிவு இணை செயலாளர்).
சோழவந்தான் (தனி) - கே.மாணிக்கம் எம்.எல்.ஏ. (கட்சி வழிகாட்டு குழு உறுப்பினர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர்).
மதுரை தெற்கு - எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. (மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்).
மதுரை மேற்கு - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்).
திருப்பரங்குன்றம் - வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. (மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்).
திருமங்கலம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (ஜெயலலிதா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்).
உசிலம்பட்டி - பி.அய்யப்பன் (மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர்).
ஆண்டிபட்டி - ஏ.லோகிராஜன் (ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்).
பெரியகுளம் (தனி) - எம்.முருகன் (அ.தி.மு.க. உறுப்பினர்).
கம்பம் - எஸ்.பி.எம்.சையதுகான் (முன்னாள் எம்.பி., தேனி மாவட்ட செயலாளர்).
ராஜபாளையம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்).
கடம்பூர் ராஜூ
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - ஈ.எம்.மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்).
சாத்தூர் - ஆர்.கே.ரவிச்சந்திரன் (விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்).
சிவகாசி - லட்சுமி கணேசன் (விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்).
அருப்புக்கோட்டை- வைகை செல்வன் (முன்னாள் அமைச்சர், கொள்கை பரப்பு துணை செயலாளர், செய்தி தொடர்பு செயலாளர்).
பரமக்குடி (தனி) - என்.சதன் பிராபகர் எம்.எல்.ஏ. (ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்).
திருவாடாணை - கே.சி.ஆணிமுத்து (அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர்).
முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணை செயலாளர்).
விளாத்திகுளம் - பி.சின்னப்பன் எம்.எல்.ஏ. (இலக்கிய அணி இணை செயலாளர்).
திருச்செந்தூர் - கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்).
ஒட்டப்பிடாரம் (தனி) - பி.மோகன் (முன்னாள் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர்).
கோவில்பட்டி - அமைச்சர் கடம்பூர் சி.ராஜூ (தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்).
சங்கரன்கோவில் (தனி) - அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி (மகளிர் அணி துணை செயலாளர்).
வாசுதேவநல்லூர் (தனி) - ஏ.மனோகரன் எம்.எல்.ஏ. (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர், தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர்).
கடையநல்லூர் - செ.கிருஷ்ணமுரளி (தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்).
பி.எச்.மனோஜ்பாண்டியன்
தென்காசி - செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. (தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்).
ஆலங்குளம் - பி.எச்.மனோஜ் பாண்டியன் (முன்னாள் எம்.பி., கட்சி வழிகாட்டு குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர்).
அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா (முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர்).
பாளையங்கோட்டை - கே.ஜே.சி. ஜெரால்டு (நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்).
நாங்குநேரி - என்.கணேசராஜா (நெல்லை மாவட்ட செயலாளர்).
ராதாபுரம் - ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. (தேர்தல் பிரிவு துணை செயலாளர்).
கன்னியாகுமரி - என்.தளவாய்சுந்தரம் (தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, அமைப்பு செயலாளர்).
Related Tags :
Next Story