திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் அறிவிப்பு
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 6 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 3 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-
1.மணப்பாறை (தனி).
2. பாபநாசம்.
Related Tags :
Next Story